கர்நாடகத்தில் புறநகர் ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு தரும் - சுரேஷ் பிரபு

கர்நாடக அரசு புறநகர் ரயில்வே திட்டத்தை அமலாக்கினால் அதற்கு மத்திய அரசு உதவும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
Published on

பெங்களூரு

பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவுவதால் புறநகர் ரயில் திட்டம் தேவைப்படுவதாக கருதப்படுகிறது.

தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்த்து விரைவில் திட்டத்தைத் துவங்க வழிசெய்யுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

மோடி அரசு கர்நாடக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக நாடு முழுதும் பயணியர் வசதிக்காக ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை தனியார் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூரைச் சேர்ந்த மத்திய அமைச்சரான சதானந்த கவுடா புறநகர் ரயில் திட்டங்களுக்கான பகிர்வை 80:20 என்பதிலிருந்து குறைக்கும்படி கோரினார். மாநில அரசு நில கையகப்படுத்தலுக்கும் செலவு செய்ய வேண்டியிருப்பதால் 80 விழுக்காட்டை ஏற்பது சுமையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com