சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வெப்பசலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, போன்ற மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.