சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018 மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும்; கிரண்குமார் பேட்டி

சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018ம் ஆண்டு மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.
Published on

ஈரோடு,

ஈரோடு சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார், சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018ம் ஆண்டு மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.

தனியார் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்.

விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com