

ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னைக்கு ஹாங்காங்கில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் சென்னையை சேர்ந்த அசாருதீன் (வயது 35), கவுதம் (32), ரியாஸ்கான் (35) ஆகியோர் வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவர் களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.