சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

ஆண்டிப்பட்டி அருகே ஆடிப்பெருக்கையொட்டி சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ பூஜைகளும், மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி இந்த கோவிலில், பழம் காய்கறி தானியம் மற்றும் சங்கு தீர்த்த அபிஷேகங்கள் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி பெருக்கையொட்டி நேற்று புண்ணிய தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு 108 சங்குகளில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் 108 சங்குகளில் இருந்த புனித நீரை ஊற்றி சிவனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com