

சென்னை,
சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு ஆதாரமாக இருந்தவரும், நாடார் சமுதாயத்தில் இருந்து முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபைக்கு தேர்வானவருமான பட்டிவீரன்பட்டியை சேர்ந்த டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் 127-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை தியாகராயநகர் பனகல் பூங்கா அருகே உள்ள டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமையில் பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து நாடார், பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், துணைத்தலைவர்கள் கரு சின்னதுரை, எம்.ஏ.திரவியம், செயலாளர் எல்.சி.மனோகரன், வக்கீல் ஜே.சீனிவாசன், கல்வி கமிட்டிக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.முத்து, செயற்குழு உறுப்பினர் கனகசபாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிநாடார், சினிமா சண்டை பயிற்சி கலைஞர் ஜாகுவார் தங்கம், டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் நினைவு அறக்கட்டளை தலைவர் வேல்ராஜ்,
நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்துரமேஷ், மாவட்ட தலைவர்கள் வி.எல்.சி.ரவி நாடார், மணிகண்டன், அயன்புரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் வி.ஏ.பிரபாகரன், மீஞ்சூர் நாடார் சங்க செயலாளர் கே.அன்பழகன், பொருளாளர் ஏ.சிவசுப்பிரமணியன், ராஜா அண்ணாமலைபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்க தலைவர் கே.செல்வம், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் பா.இசக்கிமுத்து ஆகியோரும் டபிள்யூ.பி.ஏ. சவுந்திர பாண்டியனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.