திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

அதிகரிக்கும் பாதிப்பு

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ முயன்றும் கொரோனா கட்டுப்பட மறுக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

தொற்றின் தீவிர தன்மை அதிகம் உள்ளவர்களை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் எனற முனைப்பில் உறவினர்கள் இருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு மருத்துவ மனையாக தொடர்பு கொண்டு ஆக்சிஜன் படுக்கை இருக்கிறதா? என்று கெஞ்சுவது நெஞ்சை நிலை குலைய வைக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. அதன்பின்னர் ஆயிரத்திற்கும் கீழேஇறங்கியது. இதனால் திருப்பூர் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை நேற்றைய பாதிப்பு தவிடு பொடியாக்கிவிட்டது.

1,561 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,561 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அனைவரையும் அச்சம் அடைய வைத்துள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது.

3 பேர் பலி

தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்த 7 ஆயிரத்து 92 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த 59 வயது ஆண் கோரோனாவால் பாதிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுபோல் திருப்பூரைச் சேர்ந்த 76 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 86 வயது ஆண் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பொதுமக்களை மட்டுமல்ல அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தனை கட்டுப்பாடுகள் விதித்தும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 1,561 பேர் பாதிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்று அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனாவின் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு உள்ளது. குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள மாநகராட்சி பகுதியில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கிருமி நாசினி தெளிப்பு, கொரோனா பரிசோதனை பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களை பயத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com