மதுபாட்டில்கள் விற்ற 16 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் விற்ற 16 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி நகர, ஊரக மற்றும் கோவில்பட்டி உட்கோட்டத்தில் தலா 3 வழக்குகளும், திருச்செந்தூர், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் தலா 2 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் என மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்து அதில் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 974 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 130 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com