மதுபாட்டில்கள் விற்ற 16 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் விற்ற 16 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்டம் முழுவதும் உள்ள 13 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 113 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com