சின்னவேடம்பட்டியில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சின்னவேடம்பட்டியில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னவேடம்பட்டியில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
Published on

கணபதி,

கோவை கணபதியை அடுத்த சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார்(21), அருள்(21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சந்தோஷ்குமார், அருள் ஆகியோர் சேர்ந்து சூர்யாவை தாக்கினர்.

இதுகுறித்து புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ்குமார், அருள் ஆகியோரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com