சிறுமிக்கு திருமணம்; 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமிக்கு திருமணம் நடத்திய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனா.
சிறுமிக்கு திருமணம்; 2 பேர் கைது
Published on

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிகண்டன்(வயது 28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்தது. அன்றைய தினம் மாலையில் சிறுமி, தனது காதலனான வளையாம்பட்டு காலனியை சேர்ந்த பலராமன் மகன் தீனா(20) என்பவருடன் ஓடிவிட்டார். இதனிடையே தனது மகளை தீனா கடத்திசென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், இவரது உறவினர் சவுந்திரபாண்டியன்(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com