மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபரியேல் மற்றும் போலீசார் புத்தளம் அருகே சேதுபதியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக தெங்கம்புதூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த லிங்கம் (வயது56), பறக்கை அருகே உள்ள புல்லுவிளையை சேர்ந்த துரைசிங் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற ரொக்கப்பணம் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com