மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

உடையார்பாளையம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணதிரையன்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கர்ணன்(வயது 32), உடையார்பாளையம் கீரைக்கார தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் ராயர் (58) ஆகியோர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com