மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய சோதனையில், மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்த மாரிமுத்து(வயது 71) மற்றும் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த பிச்சைபிள்ளை(42) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்து மற்றும் பிச்சைபிள்ளை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 7 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com