கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
Published on

திருத்தணி,

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் ஆந்திர - தமிழக எல்லை பகுதிகளான திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனைச்சாவடிபகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக ஆந்திராவில் இருந்து வந்த 2 இளைஞர்களை மடக்கி சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது, அவர்களிடம் விசாராணை நடத்தியதில் திருத்தணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த கஜபதி (வயது 20), நேரு நகரை சேர்ந்த முபாரக்(20) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்து திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com