குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

கோவில்பட்டியில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி மேற்கு போலீசார் கடந்த மாதம் 29-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில்பட்டி மெயின் ரோட்டில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியை சேர்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச்செல்வம் (வயது 23), தென்காசி மாவட்டம் கள்ளம்புளி பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ரவி என்ற கார்த்திக் (36) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் அப்பகுதியில் வந்தவரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வம், ரவி என்ற கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாரிச்செல்வம் மீது கோவில்பட்டி மேற்கு போலீசில் அடி-தடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான மாரிச்செல்வம், ரவி என்ற கார்த்திக் ஆகிய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் சபாபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து மாரிச்செல்வம், ரவி என்ற கார்த்திக் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 2 வாலிபர்களையும் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com