கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
Published on

புதுக்கோட்டை, ஜூலை.8-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து405 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 65 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து544 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் இறப்பு எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com