கொரோனாவுக்கு 2 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்
கொரோனாவுக்கு 2 பேர் பலி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 690-ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை மொத்தம் 59 ஆயிரத்து 6 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 2ஆயிரத்து 254 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 75 வயது முதியவர், 74 வயது முதியவர் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 430-ஆக அதிகரித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com