நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 151 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 933 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 019 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொற்றால் 53 பேர் இறந்தனர். மீதமுள்ள 861 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com