பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

உத்தனப்பள்ளி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
Published on

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே உள்ள கொடகாரனப்பள்ளியை சேர்ந்தவர் சாந்தா (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தம்மா (50) உறவினர்கள். இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சாந்தா தாக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தம்மாவின் உறவினர்கள் மகேந்திரன் (29), பாக்யராஜ் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார், சாந்தம்மாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com