திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 2 பேருக்கு கத்திக்குத்து 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 2 பேருக்கு கத்திக்குத்து 3 பேர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள வயலாநல்லூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சிவா என்கிற ஜானகிராமன்(வயது 21). நேற்று முன்தினம் சிவா, வயலாநல்லூர் கங்கையம்மன் கோவில் அருகே அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னராசு (24), அவரது நண்பர்கள் திலீப்(28), சந்தோஷ்(27) ஆகிய 3 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சிவாவை தகாத வார்த்தையால் பேசி கழுத்து மற்றும் வலது தோள்பட்டையில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதை தடுக்க வந்த சிவாவின் உறவினரான சங்கர் (20) என்பவரையும் கத்தியால் தலையில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

காயம் அடைந்த இருவரும் அங்கு உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிவா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராசு, திலீப், சந்தோஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com