2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வழிப்பறி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள ஒரு இரும்பு கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் சக்தி என்கிற சக்திவேல் (35), காளிதாஸ் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் பல்வேறு வழக்குளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. எனவே ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com