திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கூடலூர் ஏரி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கூடலூர் ஏரி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஏரி கரையில் உள்ள முள்புதரில் பாண்டியமீனா (வயது 40), என்ற பெண் மது விற்று கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்த தாம்பரம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 35), என்பவரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com