

காட்டுமன்னார்கோவில்,
லால்பேட்டை சோதனை சாவடியில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், தமிழ்செல்வன், ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் .
அப்போதுஅந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தினர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டனர்.
உடன் போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்ப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 150 பாக்கெட் மேல் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மொத்த எடை 2 கிலோ ஆகும். மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
இதையடுத்து இவருரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் சிதம்பரம் எம்.கே. தோட்டத்தை சேர்ந்த மணிமேக் மகன் ஆகாஷ் (வயது 21) என்பவதும் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
மற்றொருவர் மின் நகரை ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் ( 19 ), இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
நண்பாகளான இவர்கள் தஞ்சாவூர் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி சிதம்பரம் பகுதிக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக கூறினர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.