சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது கேரள வாலிபர் கைது

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது கேரள வாலிபர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்களில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அப்போது சென்னையில் இருந்து துபாய்க்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இப்ராகீம் (வயது 33) என்பவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம்

அதில் அவரது உடைமைகளில் துணிகள், செய்தித்தாள்களுக்கு நடுவில் சவுதிஅரேபியா, ஓமன் ஆகிய நாடுகளின் பணத்தை மறைத்து வைத்து துபாய்க்கு கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இப்ராகீமின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். மேலும் அவர் துபாய்க்கு கடத்த முயன்றது ஹவாலா பணமா?, இந்த கடத்தல் பின்னணியில் சர்வதேச ஹவாலா கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com