2,500 டன் புழுங்கல் அரிசி

தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, தேனிக்கு சரக்கு ரெயிலில் 2,500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
2,500 டன் புழுங்கல் அரிசி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, தேனிக்கு சரக்கு ரெயிலில் 2,500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

2,500 டன் புழுங்கல் அரிசி

அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

பின்னர் சுமை தூக்கும் பணியாளர்கள் மூலம் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காக தூத்துக்குடி, தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 21 வேகன்களில் 1,250 டன் தேனிக்கும், 21 வேகன்களில் 1,250 டன் தூத்துக்குடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com