காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
Published on

காஞ்சீபுரம் அருகே வளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மூட்டை மூட்டையாக 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. உடனடியாக ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசியை குடியுரிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 25), பரணிதரன் (20), ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த ரித்திஷ் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com