மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
Published on

மலைக்கோட்டை:

திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் நேற்று கோட்டை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர்கள், சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகாமணி (29), ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ராஜா (29), இ.பி.ரோடு கமலா நேரு நகரைச் சேர்ந்த தினேஷ்குமார்(29) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com