தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள்.
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
Published on

தென்காசி, மே:

தென்காசி மாவட்டத்திலும் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயது, 67 வயது ஆண்கள் மற்றும் 70 வயது பெண் ஆகிய 3 பேரும் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தென்காசி மாவட்டத்தில் நேற்று 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 468 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 1,428 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com