சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
Published on

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள அய்யனேரி வாரிக்கரை பகுதியில் சேவல் சண்டையில் சிலர் ஈடுபட்டிருப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட மேலக்குட்டபட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது 44), முசிறி பகுதியைச் சேர்ந்த ராஜா (35), கருங்கலாப்பள்ளியை சேர்ந்த அருண்குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com