275 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர்.
275 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 44 வயது ஆண், 34 வயது ஆண், 72 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று 275 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 323 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 35 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 265 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 236 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com