மாவட்டத்தில் கொரோனாவுக்கு 31 பேர் பாதிப்பு - முதியவர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார். 31 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 31 பேர் பாதிப்பு - முதியவர் பலி
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 46 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 7 பேர் மற்றும் வாழப்பாடியிலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைவாசலில் 3 பேர், கொங்கணாபுரத்தில் 2 பேர், மகுடஞ்சாவடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மேலும் தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா 4 பேர், நாமக்கலில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 46 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனிடையே சேலத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com