ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 3,550 டன் பச்சரிசி தஞ்சை வந்தது

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 3,550 டன் பச்சரிசி தஞ்சை வந்தது
ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 3,550 டன் பச்சரிசி தஞ்சை வந்தது
Published on

தஞ்சாவூர்,

மத்திய தொகுப்பில் இருந்து பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இதைப்போல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி, கோதுமை மூட்டைகள் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக்கிடங்கிலும், தமிழக அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கிலும் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 58 வேகன்களில் 3 ஆயிரத்து 550 டன் பச்சரிசி நேற்று தஞ்சை வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com