மதுபாட்டில்கள் விற்ற 6 பேர் கைது

களக்காட்டில் மதுபாட்டில்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் விற்ற 6 பேர் கைது
Published on

களக்காடு, மே:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சிங்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்ததாக அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40), பாலமுருகன் (50) மற்றும் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்றதாக நம்பி (44), முருகன் (47), மாரியப்பன் (46), சேதுராமன் துரை (38) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com