6 கிலோ கஞ்சா பறிமுதல்

கேரளாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

ஆண்டிப்பட்டி:

கேரளாவில் இருந்து விற்பனை செய்ய காரில் கஞ்சா கடத்தி வருவதாக ஆண்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 6 கிலோ கஞ்சாவை கடத்தி வருவது தெரியவந்தது. காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், கேரள மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 48), தேவிகுளம் பகுதியை சேர்ந்த ஜோமன் (48) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள பிராதுகாரன்பட்டியை சேர்ந்த கழுவன் (38) என்பவரிடம் கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக போலீசாரிடம் கூறினர்.

இதையடுத்து கழுவனையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com