நெல்லை மாவட்டத்தில் 66.54 சதவீதம் வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் 66.54 சதவீதம் வாக்குப்பதிவானது
நெல்லை மாவட்டத்தில் 66.54 சதவீதம் வாக்குப்பதிவு
Published on

நெல்லை, ஏப்:

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 66.54 சதவீத வாக்குகள் நேற்று பதிவானது.

வாக்காளர்கள் ஆர்வம்

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை தொகுதியில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 8 வாக்காளர்களும், அம்பையில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 658 வாக்காளர்களும், பாளையங்கோட்டையில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 379 வாக்காளர்களும், நாங்குநேரியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 578 வாக்காளர்களும், ராதாபுரத்தில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 525 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த 5 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல பலர் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இறுதியில் மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் சேர்த்து 66.54 சதவீத வாக்குகள் பதிவானது.

நெல்லை-அம்பை

நெல்லை தொகுதியை பொறுத்த வரை காலை 9 மணிக்கு 3.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதன்பிறகு 11 மணிக்கு 22.16 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 37.93 சதவீதமும், மாலை 3 மணிக்கு 49.76 சதவீதமும், 5 மணிக்கு 60.63 சதவீதமும், இரவு 7 மணிக்கு 66.90 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

அம்பை தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 6.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் 11 மணிக்கு 25.94 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 40.15 சதவீதமும், மாலை 3 மணிக்கு 49.78 சதவீதமும், 5 மணிக்கு 68.39 சதவீதமும், இரவு 7 மணிக்கு 72.05 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

பாளையங்கோட்டை- நாங்குநேரி

நெல்லை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி பாளையங்கோட்டை தொகுதியில் தான் அதிக வாக்குகள் பதிவாகி இருந்தது. அதாவது அப்போது வாக்குப்பதிவு சதவீதம் 10.29 ஆக இருந்தது. பின்னர் 11 மணிக்கு 13.03 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 36.45 சதவீதமும், மாலை 3 மணிக்கு 45.67 சதவீதமும், 5 மணிக்கு 53.44 சதவீதமும், இரவு 7 மணிக்கு 57.76 சதவீதமும் வாக்குகள் பதிவானது. நாங்குநேரி தொகுதியை பாறுத்த வரை கால 9 மணிக்கு 6.42 சதவீத வாக்குகள் பதிவானது. பின்னர் 11 மணிக்கு 11.39 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 37.57 சதவீதமும், மாலை 3 மணிக்கு 50.07 சதவீதமும், 5 மணிக்கு 60.89 சதவீதமும், இரவு 7 மணிக்கு 68.6 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

ராதாபுரம்

ராதாபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு 7.18 சதவீதமும், 11 மணிக்கு 23.35 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 35.89 சதவீதமும், மாலை 3 மணிக்கு 47.69 சதவீதமும், 5 மணிக்கு 58.87 சதவீதமும், இரவு 7 மணிக்கு 67.94 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com