

கூடலூர்,
கூடலூர் அருகே உள்ள பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட பகுதியில்(ரேஞ்சு-2) வழக்கம்போல் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறித்தனர். அப்போது அங்கு மலைப்பாம்பு புகுந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாடுகாணி வனத்துறையினர் தேயிலை செடிகளுக்கு அடியில் பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து கீழ்நாடுகாணி வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். அதன் பின்னரே தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.