கொரடாச்சேரி அருகே விவசாயிக்கு பாட்டில் குத்து அண்ணன் கைது

கொரடாச்சேரி அருகே விவசாயியை பாட்டிலால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி அருகே விவசாயிக்கு பாட்டில் குத்து அண்ணன் கைது
Published on

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே உள்ள தைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது35). இவருடைய தம்பி கண்மணி (31). இருவரும் விவசாயிகள். மதியழகன் குடவாசல் அருகே உள்ள மருதுவாஞ்சேரியில் வசித்து வருகிறார். இவர்களுடைய தாய் மாரியம்மாள். இவர் மதியழகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மதியழகன் தன்னை அடிப்பதாக மாரியம்மாள் தனது இளையமகன் கண்மணிக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்மணி சம்பவத்தன்று தைக்காலுக்கு வந்து தனது அண்ணன் மதியழகனிடம், தாயை அடிப்பது குறித்து கேட்டார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது மதியழகன், அருகில் கிடந்த பாட்டிலை உடைத்து கண்மணியை குத்தினார். இதில் கை மற்றும் நெஞ்சு பகுதியில் படுகாயம் அடைந்த கண்மணி, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்மணி கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com