பள்ளிகொண்டா அருகே சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
பள்ளிகொண்டா அருகே சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

அணைக்கட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் வேலூர் நோக்கி சென்றனர். பள்ளிகொண்டாவை அடுத்த கிங்கினி அம்மன்கோவில் அருகே சென்றபோது தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பழைய இரும்பு பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் ஆட்டோ சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவுழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் மாதனூர் தங்க நகரம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (45), மோட்டார் சைக்கிள் சென்ற 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முருகன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com