திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு முதியவர் பலி

திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு முதியவர் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 634 பேர் பலியாகி இருந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் நேற்று பலியானார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 635 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே ஒரு பெண் உள்பட மேலும் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 709 ஆனது. அதேபோல் 11 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 942 ஆனது. நேற்றைய நிலவரப்படி 132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com