மஞ்சூர் அருகே மரம் முறிந்து சாலையில் விழுந்தது

தொடர் மழையால் மஞ்சூர் அருகே மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
மஞ்சூர் அருகே மரம் முறிந்து சாலையில் விழுந்தது
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 2 நாட்களாக மதியம் வரை வெயில் அடிக்கிறது. மதியத்துக்கு மேல் பரவலாக மழை பெய்கிறது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. விவசாய நிலங்களை ஒட்டி உள்ள கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர் மழை காரணமாக மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலை கேரிங்டன் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது.

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-32.2, குந்தா-8, அவலாஞ்சி-7, பந்தலூர்-32, சேரங்கோடு-10 உள்பட மொத்தம் 108.2 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 3.73 ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com