ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார்.
ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி சுரங்க வழிப் பாதை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக, தூத்துக்குடி ரெயில்வே போலீசுக்கு கிராம நிர்வாக அதிகாரி திருவேங்கட ராஜுலு புகார் செய்தார். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன், ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனா. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com