தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி

திருப்பத்தூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
Published on

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிருஷ்ணகிரி மேம்பாலம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com