திருவாலங்காடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

திருவாலங்காடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
திருவாலங்காடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அஜித்குமார் (வயது 26). இவர் நேற்று முன்தினம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற விரைவு ரெயில் மோதி அவர் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com