மொபட் மீது டேங்கர் லாரி மோதி விவசாயி பலி

சூளகிரி அருகே மொபட் மீது டேங்கர் லாரி மோதியதில் விவசாயி பலியானார்.
மொபட் மீது டேங்கர் லாரி மோதி விவசாயி பலி
Published on

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள பெரியகுதிபாலா கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 42). விவசாயி. இவர் நேற்று தனது மொபட்டில் சாமல்பள்ளம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com