திருவள்ளூர் பகுதிகளில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தும் விதமாக திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் பகுதிகளில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை
Published on

தமிழக போக்குவரத்து ஆணையர்-சேப்பாக்கம், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் உத்தரவின்பேரில், நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் விளக்க உரை ஆற்றினார்.

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் ஓட்டுனர் உரிமத்தேர்வு, புதிய வாகன பதிவு, தகுதி சான்று மற்றும் இதர சேவைகளுக்காக அலுவலகம் வந்த 100-க்கும் மேற்பட்ட நபர்களை ஒருங்கிணைத்து, படிக்கட்டு பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் அதற்கான சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் குறித்த அறிவியல் விளக்கம், போக்குவரத்து சின்னங்கள் மற்றும் கை சைகைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இறுதியில் பஸ்களில் படியில் பயணம் செய்பவர்கள் மீது போக்குவரத்து மற்றும் போலீசார் சார்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com