விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தாயார் திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஆலங்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் காவியன் (வயது 24). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தயார் ஏன் வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிகிறாய் என திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காவியன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com