

விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள ஏ.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ராஜன் (வயது 30). சம்பவத்தன்று இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.