அன்னவாசல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே செவ்வாதுபட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் மணிராஜா (வயது 21). இவர் மதுரையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மணிராஜா கடந்த 2 நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com