மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 35) விவசாயி. இவரது 3 வயது மகன் ஹரிஷ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டான். இதனால் பெரியசாமி மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கீழப்பழுவூர் சென்று டாஸ்மாக் கடையில் மது வாங்கி, அதில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். மேலும் தான் விஷம் குடித்ததை, குடும்பத்தினருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது குடும்பத்தினர் மயங்கி கிடந்த பெரியசாமியை மீட்டு அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com